புற்றுநோயை உண்டாக்கும் பானி பூரி

கர்நாடகாவில், பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள 250 பானி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பானிபூரியில் புற்றுநோய் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்