-பதுளை நிருபர்-
பதுளை வினீதகம வீதி குண பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
பதுளை வினீதகம வீதி குண பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபர் தனது தோட்டத்தில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற சட்ட விரோதமாக முறையில் மின் வேலி அமைத்து அதை சரி செய்ய சென்ற வேளையில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்