மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

களுத்துறை பிரதேசத்தில் இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிரியவிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் வீதியில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்துள்ள நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்