ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன- கல்லாறு சதீஷ்-

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை தமிழர்களின் ஆயுதங்கள் மௌனித்தன, இப்படி ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன என கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவைக் கலைவிழா ஸ்காவுறோவில் நடைபெற்ற போது இதில் பிரதம விருந்தினர் கலந்து கொண்ட கல்லாறு சதீஷ் தனது உரையில் தெரிவித்தார்.

கனடா ஒன்ராறியோ மாநில முதியோர் நலன் பேணல் விவகார அமைச்சர் றேமண்ட் சோ ,கனடா பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஷாகித் ,ரொறொன்ரோ நகர பிரதி மேயர் ஜெனிபர்,ரொறோன்ரோ நகர கவுன்ஸ்லர் ஜமால் மேயர், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள்,பத்திரிகையாளர்கள்,தமிழகப் பாடகர் வி.எம்.மகாலிங்கம் மற்றும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட நேசத் தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்ட கனடா உதயன் விழாவுக்கு சுவிஸ் தொழிலதிபரும் ,சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும்,எழுத்தாளரும்,கவிஞரும்,பேச்சாளருமான கலாநிதி கல்லாறு சதீஷ் என்கிற முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா பிரதம விருந்தினராக அழைக்கபட்டிருந்தார்.

தங்களின் உரிமைகளுக்காகத் தமிழர்கள் எதிர்காலத்தில் “அன்பு “என்கிற வழியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்,அதற்காகக் கல்வியிலும்,பொருளாதாரத்திலும் தங்களை மேலும் வளர்த்துக்கொண்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தமிழர்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் திருக்குறளைப் படித்த மகாத்மா காந்தி “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” எனும் குறலின் படிதான் பிரித்தானியாவுக்கு எதிராக அகிம்சை வழி நடந்து மாபெரும் இந்திய தேசத்தை மீட்டெடுத்தார்.

அந்த மகாத்மாவின் வழி ஒன்றே இன்றைய உலகப்போக்கில் தமிழகள் உரிமைகளைப் பெற ஒரே வழி என்று நான் கருதுகிறேன் மனித மனங்களை வெற்றிகொள்வதன் மூலம் மட்டுமே நிரந்தரத் தீர்வை அடைய முடியும் எனவும் தனதுரையில் சதீஷ் தெரிவித்துள்ளார்.

மற்றும் அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மேயர்,கவுன்சிலர்,என்று பலரும் உரை நிழ்த்த நடனம்,நாட்டிய நாடகம் என இயல்,இசை,விழாவாக உதயன் பல்சுவைக் கலாச்சாரவிழா இனிதே நடைபெற்றது.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் சிந்தனையிலும், தேனீயைவிடச் சிறந்த சுறு சுறுப்பிலும்,அவர்தம் பாரியார் திருமதி லோகேந்திரலிங்கம் பாப்பாவின் ஆலோசனையிலும் கனடா உதயன் புலம்பெயர் தமிழர்களின் தனித்த அடையாளத்தைப் பெற்ற பத்திரிகையாகத் திகழ்வதை அவதானிக்க முடிகிறது.

பிரதம விருந்தினர் கல்லாறு சதீஷ் கனடிய நலவாழ்வு அமைச்சர் றேமண்ட் சோ பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன், ஒன்ராறியோ மாநில பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி,ரொறோன்ரோ மாநகர கவுன்ஸிலர் ஜமால் மேஜர்ஸ் ஆகியோர் கனடா வருகையை வரவேற்று அவர்தம் தமிழ்ப் பணியை வாழ்த்தி உரை நிகழ்த்தியதுடன் சிறப்புச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்