ஆட்கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை ஓமானுக்கு ஆட்கடத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.