-யாழ் நிருபர்-
யாழில் கடந்த 25 ஆம் திகதி கடற்தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர், புங்குடுதீவுக் கடலில் நேற்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த, வேலு உதயகுமார் (வயது 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 25 ஆம் திகதி கடற் தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
தீவிரமாக தேடுதல் மேற்கொண்டும் குறித்த மீனவர் மீட்கப்படாத நிலையில் இந்த சடலம் கரையொதுங்கியது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் சடலத்தை அடையாளம் காட்டிய நிலையில், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிகை எடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.