உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பிற்கு வடகொரியா முழுமையான ஆதரவு

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பை முழுமையாக ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர்புட்டினை சந்தித்தவேளை கிம்ஜொங் அன் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் புட்டினிற்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் ரோஜா மலர்களுடன் அவரை வரவேற்றுள்ளனர் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் புட்டினிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்