இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தினால் முடக்கப்பட்ட (Block) பேஸ்புக் பாவனையாளர் ஒருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் (Unblock).
ருக்ஷான் பிரியநாத் (Rukshan Priyanath) என்ற ஒருவரே, பொலிஸாரின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டதற்காக பொலிஸாரின் முகநூல் பக்கத்தில் இருந்து முடக்கப்பட்டார்.
அரச நிறுவனம் ஒன்று தன்னை முடக்குவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என வாதிட்டு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்.
இது குறித்து விசாரணை செய்த ஆணைக்குழுவிடம், “தாம் அவரை வேண்டுமென்றே முடக்கவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தானாகவே (Automatically) இந்த முடக்கம் நடந்திருக்கலாம்” என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பயனர் தற்போது மீண்டும் பொலிஸாரின் முகநூல் பக்கத்தைப் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரசு நிறுவனங்களை விமர்சிப்பது அவற்றை எதிர்ப்பதாகக் கருதப்படக்கூடாது என்றும், பொது நிறுவனங்கள் இணையதளங்களில் செயல்படும்போது அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ருக்ஷான் தெரிவித்துள்ளார்.