இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று சனிக்கிழமை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,312 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.