ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றில், குடிநீர் போத்தல் ஒன்றை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட, அதிக விலைக்கு விற்றதற்காக 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்தது.
ஹப்புத்தளை வெலிமட வீதியில் உள்ள உணவகம் ஒன்றில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, இவ்வாறு குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது, நீதிமன்றம் அந்த உணவகத்திற்கு 10 லட்சம் ரூபா அபராதம் விதித்தது.