பெரும்பான்மை இலங்கையர்களின் நம்பிக்கைக்குரிய ஒரே நபர்

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, பெரும்பான்மையான இலங்கையர்களின் நம்பிக்கைக்குரிய ஒரே நபராக உருவெடுத்துள்ளதாக ‘பொருளாதார சீர்திருத்த சுட்டெண்’ கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இது மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் (CPA) கணக்கெடுப்பு ஆராய்ச்சிப் பிரிவான Social Indicator (SI) ஆல் நடத்தப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் 31.4 வீதமானவர்கள் மாத்திரமே அவர் மீது நம்பிக்கையில்லை என 57 வீதமான இலங்கையர்கள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்தை மாற்றியமைத்த நம்பிக்கைக்குரிய இரண்டாவது நபர் (45 சதவீதம்) ஆவார்.

பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மூன்றாவது நம்பிக்கைக்குரிய நபராக (43 சதவீதமாக ) உள்ளார்.