வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்த நபர் : கேள்வி கேட்ட ஊழியர் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்-

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்த ஒருவர் கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது நேற்றையதினம் திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார்.

இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலகம மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்