Maison Migration என்ற நிறுவனமும் மட்டக்களப்பு Good Shepherd College சர்வதேச பாடசாலை ஆகியவை இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவனத்தின் கிளைக் காரியாலயத்தை ஆரம்பித்துள்ளனர்.
Maison Migration கிளைக் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு Good Shepherd College பாடசாலையில் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவில் மாணவர்களுக்கு சிறந்த உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வரும் Maison Migration நிறுவனமானது மட்டக்களப்பு மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் உயர் கல்விக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் பாடசாலையில் தமது கிளைக் காரியாலயத்தை நிறுவியுள்ளனர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கௌரவ விருந்தினராக அவுஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் ஜோன் மேக்கெலர், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் பாமதி ஞானச்செல்வம், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நாகராஜா தனஞ்செஜன் மற்றும் Good Shepherd கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,
பல வருடங்களுக்கு முன் இது போல் ஒரு நிறுவனத்தின் உதவியோடு தான் நானும் எனது உயர்கல்வியை அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தேன். ஆகவே ஊழல் இல்லாத இவ்வாறான நேர்மையான நிறுலனங்களின் சேவையை பயன்படுத்தி எமது மாணவர்கள் சிறந்த உயர் கல்வி வாய்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் இந்த நிறுவனத்தின் கிளை இங்கு ஆரம்பிக்கப்பட்டமையானது மட்டக்களப்பு மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன், என தெரிவித்தார்.