அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு ஒன்லைன் மற்றும் பிரபலமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ‘Made in England’ வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி இராஜகிரியவில் உள்ள இரண்டு விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது.
இதன்போது, இந்த தயாரிப்புகளின் தோற்றத்தை சரிபார்க்க விற்பனையாளர்கள் செல்லுபடியாகும் ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருவதாகவும், போலியாவையாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.