உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று திங்கட்கிழமை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.