-மஸ்கெலியா நிருபர்-
கினிகத்தேன பொலிஸ் பிரிவின், தெஹிகஸ்தென கிராம அலுவலர் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, தெஹிகஸ்தென வீதி முற்றிலுமாக மண் திட்டுகளால் மூடப்பட்டுள்ளது.
தெஹிகஸ்தென வீதியூடாக எல்ல உட வரை, பேருந்துகள் செல்ல முடியாது என்றும், பேருந்துகள் இடைவழிப் பாதைகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த டித்வா புயலின் போது இவ்வீதி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெல்தெனிய பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின், வீதியில் விழுந்துள்ள மண் திட்டுக்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்.