எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரத்தினபுரி பிரிவின் குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணிக்கக்கல் ஒன்று திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடொன்றின் விசாரணையில், சட்டவிரோதமான முறையில் சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான பணத்தை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டு விசாரணை நடவடிக்கைகளுக்காக முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட இருவரால் எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையக் கிடைத்த உத்தரவின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.