Sri Lanka Tamil News Site

விபத்தில் முதியவர் பலி

- Advertisement -

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரச போக்குவரத்து பேருந்து, வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் மீது மோதியதினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் கோவில்காடு இத்தாவில் பகுதியைச் சேர்ந்த முத்தையா கந்தசாமி ( வயது -59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

சடலம் பளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் முதியவர் பலி
விபத்தில் முதியவர் பலி

 

 

- Advertisement -