இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர், பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய சுத்தாவின்’ சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.