-கிண்ணியா நிருபர்-
நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தின் 2024/2025 ஆம் ஆண்டுக்கான தலைவராக பிரபல சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஹிரான் பீட்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29ம் திகதி கட்டுநாயக்க ஈகில் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் தலைவர் பதவி இவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இளம் பராயம் தொடக்கம் சமூக செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திய இவர் லயன்ஸ் கழகத்தில் இணைந்து செயற்பட்டதுடன் மிக குறுகிய காலத்தில் இப்பதவியை இளம்பராயத்தில் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
யுனைட்டட் வென்சர்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்தின் அதிபதியாக செயற்படும் இவருக்கு நாட்டின் முன்னணி தரப்படுத்தல் மதிப்பீட்டு நிறுவனத்தினால் சமூக சேவை தூதுவர் என்ற பட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளமையானது இவரது சமூக சேவையை பறைசாற்றுவதாக அமைகின்றது.
இவ்விருது சமூக சேவையில் உயரிய பங்களிப்பு செய்யும் தனிநபர்களுக்கு வழங்கப்படுவதாக அமையப்பெறுகின்றமை குறிபப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்