Sri Lanka Tamil News Site

காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 வர்த்தகர்களுக்கு அபராதம்

- Advertisement -

-யாழ் நிருபர்-

காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம் யாழ்நகர், குருநகர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு பலசரக்கு கடைகளில் திடீர் பரிசோதனை மேற்கொண்டது.

- Advertisement -

இதன்போது,  யாழ். நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார் பண்ணை புதியில் ஓர் கடையும், திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதன் உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கினர்.

திகதி காலாவதியான பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள், கடை உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்தனர்.

இன்று புதன்கிழமை குறித்த வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து, கடை மொத்தமாக 305,000 தண்டப்பணமாக செலுத்துமாறும், திகதி காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.

- Advertisement -