-கொழும்பு-
பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்படுவதைப் போன்று ஜனாதிபதி தேர்தலில் தான் யாரை ஆதரிப்பது என்று இன்னமும் முடிவெதையும் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியிருக்கிறார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க திருமதி குமாரதுங்க முன்வந்திருப்பதாக பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான செய்திகள் தவறானவை என்று அவரின் அலுவலகம் கூறியிருக்கிறது.
எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று அவர் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊடகங்களில் செய்திகள் வெளியானதைப் போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைத்துவ குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்தும் திருமதி குமாரதுங்க எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அலவலகத்தின் அறிக்கை கூறுகிறது.