
நோ-ஷேவ் நவம்பர் பின்னால் இப்படி ஒரு கதையா
“நோ ஷேவ் நவம்பர்” (No shave November) என்று ஒரு விடயம் நவம்பர் மாதத்தில் பரவலாக கடைபிடிக்கப்படுகின்றது. தாடி மீசை பிரியர்களாக இருக்கும் ஆண்கள் வட்டத்தினுள் இது அநேகமாக தெரிந்திருக்கும்.
அது என்ன “நோ ஷேவ் நவம்பர்”?
நவம்பர் மாதத்தில் ஆண்கள் இவ்வாறு காட்டுத்தனமாக தாடி மீசையை வளர்ப்பதற்கான காரணம் என்ன?
அப்படி குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் தாடிக்கும் மீசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதின் நோக்கம் என்ன?
“நோ ஷேவ் நவம்பர்” என்பது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மாதமாகும். ஆண்கள் ஒன்றிணைந்து குழுக்களாகவோ அல்லது தனியாகவோ இந்த மாதம் முழுவதும் தாடியை ஷேவ் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை புற்றுநோய் சேவை மையங்களுக்கு நன்கொடையாக வழங்கி விடுவார்கள்.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் போது தங்களது முடியை இழந்து விடுவதால் அதை தொடர்புபடுத்தியே இந்த மாதம் இவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றது.
இப்படி ஒரு விடயம் எங்கு ஆரம்பமானது என்று பார்த்தால், சிகாகோவை சேர்ந்த மேத்யூ ஹில் என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 2007ஆம் ஆண்டு இறந்து போனார்.
அதன்பின் அவரது மகன்கள் இணைந்து அவரின் நினைவாக ஆரம்பித்தது தான் இந்த பழக்கம் என்று சொல்லப்படுகின்றது.
அவர்கள் நவம்பர் மாதம் முழுவதும் தங்களது தாடியை ஷேவ் செய்யாமல் அந்த பணத்தை சேகரித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்க தொடங்கியுள்ளனர் என சொல்லப்படுகின்றது.
இதுவே காலப் போக்கில் “நோ ஷேவ் நவம்பர்” என்ற வழக்கமாக மாறிவிட்டது.
ஆகவே தாடி வைத்த கேடிகள் உங்கள் தாடியை சவரம் செய்யாமல் சேமித்த பணத்தை புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கலாம்