இம்தியாஸின் இளைஞர்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டுச் சட்ட மூல பிரேரனைக்கு பிரதமர் அங்கீகாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸின், இளைஞர்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டுச் சட்ட மூல பிரேரனைக்கு பிரதமர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், 2023 ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் இன்று சனிக்கிழமை கலந்து கொண்டு  உரை.உரையாற்றினார்.

அவருடைய முழுமையான உரை பின்வருமாறு,

இளைஞர் விவகார அமைச்சு தொடர்பான சில விடயங்களை முன்வைப்பதற்காக இன்று இந்த விவாதத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

முதலில், இளம் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு சவாலான நேரத்தில், நமது நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஒரு காத்திரமான அமைச்சின் பொறுப்பை நீங்கள் ஏற்றுள்ளீர்கள்.உங்கள் வரம்புகளுக்குள் அதைச் சரியாகச் செய்ய நான் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று எமது நாடு இரு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் பின்னணியில் தான் நாம் இந்த விவாதத்தில் கலந்து கொள்கிறோம்.ஒருபுறம் பொருளாதார நெருக்கடி.மறுபுறம் அரசியல் நெருக்கடி. இந்த நெருக்கடிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அதை சரியாக கையாள முடியும். இந்த நெருக்கடிகளை பாராளுமன்றத்தில் கேலிக்கையாக பேசி திசை திருப்பலாம் அல்லது மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் மூலம் அடக்கி விடலாம் என்று நினைப்பது வெறும் கற்பனை மாத்திரமே.

இன்று நம் நாடு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகள் இளைஞர்களின் வாழ்க்கையில் பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள் மிகுந்த விரக்தியிலும் கோபத்திலும் உள்ளனர்.இந்த நெருக்கடியால் அவர்களின் கனவுகள் சிதைந்துள்ளன.அவர்களின் நம்பிக்கை பொய்த்து போய் விட்டது.

அவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்னோக்கிப் பயணிக்க உதவும் எந்த வழியும் ஏற்பாடும் இருப்பதாக தெரியவில்லை.இந்த அழிவு அவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கோபப்பட அவர்களுக்கு உரிமை உண்டு.

இந்தப் பின்னணியில் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தக்கூடாது. இராணுவம், பொலிசார் குவிக்கப்படுவார்கள் என்று மிரட்டல், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பதையல்ல மேற்கொள்ள வேண்டும்.

பாரம்பரிய அரசியல் தந்திரோபாயங்கள் அல்லது கண்ணீர்ப்புகை, தடியடி, தோட்டாக்கள் போன்றவற்றின் மூலம் இந்நிலைமைக்கு தீர்வு என்று நினைப்பது ஒரு மாயை.’பயங்கரவாத தடைச் சட்டம்’ அல்லது ‘புனர்வாழ்வுச் சட்டங்கள்’ மூலம் இளைஞர்களை சிறைகளில், இருட்டு அறைகளில், விசாரணைகள் இல்லாமல், குற்றச்சாட்டுகள் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு தடுத்து வைத்து தங்கள் அதிகாரத்தையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைப்பது மாயை.

இதற்கு உலக வரலாறு பல உதாரணங்களை காட்டுகிறது.உலகெங்கிலும், பாரம்பரிய அரசியல் அதிகாரம் வீழ்ச்சியடைந்து, புதிய சிந்தனை கொண்ட தலைமுறைக்கு அதிகாரம் மாறி வருவதை நாம் காண்கிறோம்.

பல தசாப்தங்களுக்கு முன்பு இருந்த பழங்குடி சூழ்நிலையிலிருந்து இப்போது சமூகத்தின் மனநிலை வேறுபட்டது.தற்போதைய இளைஞர் தலைமுறையை குறுகிய மனப்பான்மையுடன் கையாள நினைப்பது நகைப்புக்குரியது.புதிய தொழில்நுட்பத்தால் பினைக்கப்பட்ட இன்றைய தலைமுறையினர் சமூக மாற்றத்திற்கான கிராமத்தில் ஒரு சக்தியாக மாறியுள்ளனர்.

இதைப் புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்கள் வரலாற்றின் மீள அழியாத குப்பைத் தொட்டிக்கு விரைவார்கள் என்பதே நடக்கும்.

இன்று உலகம் மார்ட்டின் லூதர் கிங்கைக் போன்றவர்களை கேட்கிறதேயன்றி ஹிட்லரை போன்றோரையல்ல.ஹிட்லர் ஒரு சூப்பர் ஜெர்மன் தேசம் என்ற இனவெறி சித்தாந்தத்தைக் கொண்டிருந்தார்.மார்ட்டின் லூதர் கிங் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதநேய சித்தாந்தத்தைக் கொண்டிருந்தார்.

மார்ட்டின் லூதர் கிங்கின் உலகப் புகழ் பெற்ற ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ என்ற உரையிலிருந்து ஒரு சிறு பகுதியை இந்த சபைக்கு முன்வைக்க விரும்புகிறேன். அதை இப்போது மேற்கோள் காட்டுகிறேன்.

எனது நான்கு பிள்ளைகளும் தோலின் நிறத்தால் அளவிடப்படாமல், அவர்களின் நடத்தையால் அளவிடப்படும் தேசத்தில் வாழும் நாளை நான் கனவு காண்கிறேன்.ஜோர்ஜியாவின் சிவப்பு சிகரங்களில் ஒரு மேசையைச் சுற்றி முன்னைய அடிமையாளர்களின் குழந்தைகளும் முன்னாள் அடிமை உரிமையாளர்களின் குழந்தைகளும் ஒரே மேசையில் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நாளை நான் கனவு காண்கிறேன்.

உலகம் முழுவதும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் உயிர்வாழ்விற்காக நடந்து வரும் போராட்டங்களுக்கு மகத்தான முண்ணுதாரனத்தை காண்பிக்க எமது நாட்டின் புதிய தலைமுறையின் நாடெங்கிலும் வீதிகளில் இறங்கி நடந்த அகிம்சைப் போராட்டங்களின் மூலம் வெற்றியை நாம் கண்டுள்ளோம்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து, ஆட்சியில் நலிவடைந்த நாடு என்ற வகையில், இந்த நெருக்கடியை நாம் இருந்த இடத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதாமல், அதைவிட உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் நமது இலக்குகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அந்த இலக்கை கடக்க இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் அந்தப் பயணத்தில் பங்கேற்க வசதியளிக்கப்பட வேண்டிய தேவையுண்டு. இளைஞர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமும், அவர்களுக்கு வலுவூட்டுவதன் மூலமும் விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற நேர்மறை மனப்பான்மையை இன்றைய அபிவிருத்தியடைந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

இன்று, வளர்முக நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் திறமையான மாணவர்கள் அந்தச் சமூகங்களின் உயர்மட்ட தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்களால் பறிக்கப்படுவதையும், அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஆலோசர்களாக இருப்பதையும் காண்கிறோம்.

இன்றைய அபிவிருத்தியடைந்த உலகம் இளைஞர்களை இத்தகைய முற்போக்கான, நேர்மறையான அணுகுமுறையுடன் பார்க்கிறது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் எகிப்தில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டில் இன்றைய தலைமுறை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்குப் பொறுப்பான நிர்வாக இயக்குநருமான திருமதி இங்கர் ஆண்டர்சன் கூறியது எனக்கு நினைவிற்கு வருகிறது.

நான் அதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவர் இவ்வாறு கூறியிருந்தார்;

“We have seen the energy and righteous anger of the youth, most recently on the streets of Glasgow. You are right to be angry. Previous generations have failed you. Now you can channel that energy into showing the word how it should be done. Now you can join the changemakers”

கிளாஸ்கோவில் இளைஞர்களின் போராட்டங்களின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டுஇ தீர்வுகளைக் கண்டறியும் செயல்பாட்டில் இளைஞர்களை பக்குவமாக ஈடுபடுத்துவதற்கான அழைப்பை அவர் வழங்குகிறார்.

அந்த அழைப்பு எவ்வளவு முதிர்ச்சியானது என்பதைப் பாருங்கள்? அது எவ்வளவு அற்புதமானது எனப் பாருங்கள்.

அகிம்சை வழியில் செயல்படும் இளைஞர் ஆர்வலர்களுக்கு நமது தலைவர்கள் அதற்கு நேர்மாறான முறையிலையே பதிலளிக்கின்றனர்.  மாறிய வன்னம் வழங்கிய நடத்தையின் வித்தியாசத்தையும் கவனிக்கவும். இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய அரசியலிலும், சந்தர்ப்பவாத அரசியலிலும் சோர்ந்து போயிருப்பதையும் நம்பிக்கையிழந்திருப்பதையும் இப்போராட்டங்கள் மூலம் பார்த்தோம்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 05% கூட இல்லாத ஒரு சிறு குழுவினர் செய்த வன்முறைச் செயல்களால் ஒட்டுமொத்தப் போராட்டமும் ‘பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படப்போவதனால் ‘அரசாங்கத்திற்கு எதிராக வாயைத் திறந்தால்’ பார்த்துக் கொள்வோம் என நாட்டு மக்களுக்கு அச்சத்தையும் மிரட்டலையும் கொடுப்பதையல்லவா காண்கிறோம் ? எந்த அரசியல் தரப்பின் தலைமையும் இன்றி இதுவரை வீதியில் இறங்கிய மக்கள் கூட்டம் அலைமோதியது உண்மையில் வேடிக்கையானது.

மறுபுறம், ‘எல்லாப் பிரச்சினைகளுக்கும் தம்மிடமே பதில் இருக்கிறது, அவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும்’ என்ற உயரிய கனவுச் சிந்தனைகளைக் கொண்ட சமூகம் முன்னேற வழி இல்லை.

ஒரு சமூகமாக முன்னேற, புதிய தலைமுறையை நவீன சிந்தனைகளுடனும், நவீன கருத்தோட்டத்துடனும் இணைக்க மறுக்கும் இடத்திற்குச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதிய தலைமுறையின் அடையாளமாகச் சொல்லப்படக்கூடிய இளம் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வாரம் எம்மை விட்டுப் பிரிந்தார் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஜெயதேவ உயங்கொட உட்பட பலர் அவர் தொடர்பில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர். வெளிநாட்டில் கல்வி கற்ற ஒரு திறமையான இளம் பெண், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நிராகரித்து, நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான உணர்வுகளுடன் பங்களித்தவர் அவர். நாட்டின் முன்னேற்றத்திற்கான முறைமை மாற்றத்திற்காகவும் அவர் அதீத செயற்பாட்டு தளத்தில் இருந்தார். அவரது அகால மரணத்திற்கு இந்நேரத்தில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

80களில் நியமிக்கப்பட்ட இளைஞர் ஆணைக்குழுவிற் பரிந்துரைகளை தயவு செய்து படித்துப் பார்க்குமாறு பொறுப்புள்ளவர்களை கேட்டுக் கொள்கிறேன்.அந்த பரிந்துரைகள் இன்றும் பெரும்பாலும் செல்லுபடியாகும்.

தீர்வு அடக்குமுறையல்ல.இளைஞர்களின் குறைகளையும் ஆட்சேபனைகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவற்றைத் தீர்ப்பதில் அவர்களை ஈடுபடுத்த நேர்மறையாக சிந்தியுங்கள்.

இறுதியாக, அனைத்துத் தேர்தல்களிலும் இளைஞர்களுக்கு 25%  பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற எனது முன்மொழிவை மாண்புமிகு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.நான் இந்த முன்மொழிவை முதன்முறையாக 2021 ஜூலை 7 அன்று சபை ஒத்திவைப்பு பிரேரனையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன்.

அதன் பிறகு, இந்த பிரதிநிதித்துவத்தை அனுமதிக்கும் வகையில் பாராளுமன்ற,  மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல் சட்டங்களை திருத்த ஜூலை 14,2022 அன்று, இது ஒரு தனிநபர் பிரேரனையாக முன்வைக்கப்பட்டது.

‘எங்கள் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் இடங்களில் எங்கள் குரலுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கொடுங்கள்’ என்பதே நம் நாட்டு இளைஞர்களின் கோரிக்கை.

63 வருடங்களுக்கு முன்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்ட போது இந்த முன்மொழிவு குரங்குகளுக்கு வெட்டும் கத்தியை கொடுப்பதற்கு சமம்’ என்று ஒரு சில பிற்போக்குவாதிகள் கூறிய கருத்து நினைவுக்கு வருகிறது.

இன்று, நம் நாட்டின் மக்கள் தொகையில் 4/1 க்கும் அதிகமானோர் இளைஞர்கள்.இன்று உலகில் 1.8 பில்லியன் இளைஞர்கள் உள்ளனர். 18 வயது வாக்களிக்கும் உரிமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை விட இன்றைய இளைஞர்கள் அதிக புரிதல் கொண்டவர்களாக உள்ளனர்.அவர்கள் உலகின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புடன் பிணைக்கப்பட்டுள்ளன்னர். உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து விளிப்பாகவுள்ளனர்.

அவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்காக, நாட்டில் ஒற்றுமை,அமைதி, மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் பயணத்தில் அவர்களை பங்கேற்கச் செய் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை தாமதமின்றி இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுத்து நிறைவேற்றவும் இளைஞர் விவகார அமைச்சர் உட்பட அரச தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

எனது அந்த பிரேரணையின் சில பகுதிகள் நீக்கப்பட்டு, உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது என்றும், இளைஞர்களை ஏமாற்ற முயற்சிக்காது என்றும் நான் நம்புகிறேன்.

இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாறும் எதிர்கால உலகை வெல்வதற்கும் தேவையான அறிவையும் சந்தர்ப்பத்தையும் நமது இளைஞர்களுக்கு வழங்குவதற்கு தொழிற்கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை மேம்படுத்துவதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.