ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் 3வது செயலாளர் ஈ. குஷான் இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
- Advertisement -
ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த அவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமானில் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டில் வேலை தேடும் இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவில் அனுப்பி வைத்து பின்னர் பாலியல் கடத்தலுக்கு பயன்படுத்திய மனித கடத்தல் மோசடியில் சந்தேக நபர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- Advertisement -