சமாதான நடைபயணத்தில் (Walk for Peace) பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘ஆலோக’ (Aloka) என்ற நாயின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கால்நடை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
‘ஆலோக’ நாய்க்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் (Gilanratha) சேவை, மருந்துகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவசர காலத் தேவைகளைக் கவனிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பணியாளர் குழுவொன்றும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சமாதானத்தின் செல்லப்பிராணியாகக் கருதப்படும் ‘ஆலோக’வின் பாதுகாப்பை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதி செய்வதாக கால்நடை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.