-யாழ் நிருபர்-
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது.
அந்த கைக்குண்டானது நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.