வலஸ்முல்ல பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘தெம்பிலி லஹிரு’ என்பவருக்குச் சொந்தமான, மித்தெனிய – குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத குழுவினர் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குத் தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தெம்பிலி லஹிருவின் தாயார் மட்டுமே வீட்டிலிருந்ததாகப் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்தத் தீ விபத்தில் அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.