ஆளுநர்கள் சட்டவிரோத அரசியல் நியமனங்களை மேற்கொள்கின்றனர்: சஜித் பிரேமதாச

தேர்தலை நடத்தாமல் தடம் புரளும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தென் மாகாண ஆளுநர் கடிதத்தின் மூலம், தமது அடிவருடிகளை நியமிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 273 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா எந்தரமுல்ல புனித செபஸ்டியன் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்த தெரிவிக்கையில்,

இவ்வாறு தவறிழைக்க வேண்டாம் என ஆளுநர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வங்குரோத்தான ஒரு நாட்டிற்கு இதுபோன்ற வீணான திட்டங்களை செயல்படுத்த உரிமை இல்லை. பாடசாலைகளில் குறைபாடுகள் அதிகம் இருக்கத்தக்க, பணத்தைப் பயன்படுத்தி, தேர்தல் நடத்தப்படாதுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமது சொந்த ஆதரவாளர்களுக்கு நியமணங்களை மேற்கொண்டு வரும் அநாகரீகமான செயற்திட்டத்தை நிறுத்துங்கள்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆளுநர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் நீதிமன்றில் சாட்சியமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஆளுநரின் நற்பெயருக்குரிய கௌரவத்தைப் பேணிக் கொண்டு, குறைந்த வளங்களை பாடசாலை பிள்ளைகளின் நலனுக்காக பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்