எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை

எரிபொருள் விலையில் இந்த வாரம் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்த்தர், எரிபொருளை கோராததால் (order) எரிபொருள் நிலையங்களில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்  மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள, எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான இருப்பு கைவசம் உள்ளது.

எனவே, விநியோகஸ்த்தர்கள் தங்கள் தேவையான எரிபொருள் அளவை கட்டளை செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.