மாண்டஸ் புயல் காரணமாக, தென்னிந்தியாவின் கடலோரப் பகுதியில் கனமழை பெய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சூறாவளி வலுவிழந்த பின்னர், தென்னிந்தியாவின் மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
கடந்த 3 மணி நேரத்தில் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததுடன், தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையில், சென்னையில் இன்று சனிக்கிழமை காலை 5:30 மணி நிலவரப்படி சுமார் 115 மி.மீ மழை பெய்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 13 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- Advertisement -