யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் உயிர் இழந்துள்ளார்.
குருநகர் 5 மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
மீனவர் நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியதன் காரணமாக அவர் உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்த மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்