கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீ மிதித்தல் நிகழ்வு

கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை தீ மிதித்தல் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவம் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக டச்பார் வங்களாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நேற்று புதன் கிழமை இரவு பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில் தீ மிதித்தல் சடங்கு இடம்பெற்றது.

தீ மிதித்தல் நிகழ்வில் சிறியவர்கள் பெண்கள் முதல் பலரும் கலந்த கொண்டு தங்களது நேர்த்திகடன்களை நிறைவேற்றி சென்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்