திருமண நிகழ்வில் தீப்பரவல் : 100 பேர் உயிரிழப்பு

ஈராக்கின் வடக்கு பகுதியில், திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ பரவலில் 100 பேர் வரை உயிரிழந்ததுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் மணமகனும், மணமகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக்கின் வடக்கு நினிவே மாகாணத்தில் உள்ள அல்-ஹம்தானியா மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில் கேளிக்கை பட்டாசுகளின் ஊடாக தீப்பற்றியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.