Sri Lanka Tamil News Site

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

- Advertisement -

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட விலைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும், பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச அறிவித்துள்ளது.

புதிய விலைகள்

காய்ந்த மிளகாய் – 30 ரூபா குறைக்கப்பட்டு 1700 ரூபா

- Advertisement -

வெள்ளை பச்சையரிசி – 10  ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபா

சிவப்பரிசி – 08 ரூபா குறைக்கப்பட்டு179 ரூபா

வௌ்ளை நாடு (உள்நாடு) – 05 ரூபா குறைக்கப்பட்டு 184 ரூபா

சிவப்பு பருப்பு – 05 ரூபா குறைக்கப்பட்டு 365 ரூபா

கீரி சம்பா – 04 ரூபா குறைக்கப்பட்டு 235 ரூபா

- Advertisement -