Sri Lanka Tamil News Site

உள்ளுராட்சி மன்றத்தேர்தலை நடத்துவதற்கு சட்டத் தடையில்லை

- Advertisement -

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத் தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடன் தற்போது இடம்பெறும் கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் வெற்றிக்காக சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இங்கு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதேவேளை, களுத்துறை மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஜே.வி.பி இன்று காலை கையளித்தது.

மேலும், பல அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எம்.ஏ.எல்.ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -