மீன் சாப்பிட்டதன் விளைவு : உயிருக்காக போராடும் பெண்

அமெரிக்காவின் – கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் மீன் சாப்பிட்டதால் உயிருக்கு போராடி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் – கலிபோர்னியாவை சேர்ந்த லாரா பராசாஸ் என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர், அவரது உடலில் சிறிது நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கை விரல்கள் கறுப்பாக மாறியுள்ளன. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, ஆனாலும் அவரின் நிலைமை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவரின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் லாரா பராசாஸ் உயிருக்கு போராடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.