-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் நேற்று திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
உறவினர்கள் சடலத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு தோன்றியது.
அதனையடுத்து அவர்கள் சடலத்தினை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -