சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இனந்தெரியாத பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் 4 அடி 5 அங்குலம் உயரமுடைய தோற்றத்துடன், பச்சை நிற சேலை அணிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.