4 மாகாணங்களுக்கு பலத்த மழை மற்றும் காற்று எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் (யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 230 கி.மீ.) “மண்டஸ்” என்ற கடுமையான சூறாவளி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் டிசம்பர் 09 ஆம் திகதி இரவு நேரத்தில் கடக்க வாய்ப்புள்ளது. .

எனவே,  வட மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.