இலங்கையில் தங்க விலை இன்று திங்கட்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 29 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் ,இன்று 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் , 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.