இலங்கையில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம், ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
முதலாவது திருத்தம் – மார்ச் 1
ஒக்டேன் 92 பெட்ரோல் 1 ரூபாயால் அதிகரித்து 293 ஆக உயர்ந்தது.
ஒட்டோ டீசல் 4 ரூபாயால் அதிகரித்து 281 ஆக உயர்ந்தது
சுப்பர் டீசல் 6 ரூபாயால் அதிகரித்து 329 ஆக உயர்ந்தது
ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை
இரண்டாவது திருத்தம் – மார்ச் 10
ஒக்டேன் 95 பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரித்து 365 ரூபாயாக உயர்ந்தது
ஒக்டேன் 92 பெட்ரோல் 24 ரூபாயால் அதிகரித்து 317 ரூபாயாக உயர்ந்தது
ஓட்டோ டீசல் 303 ரூபாயாக உயர்ந்தது
சுப்பர் டீசல் 353 ரூபாயாக உயர்ந்தது
மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாய் அதிகரித்து 195 ரூபாயாக உயர்ந்தது
மூன்றாவது திருத்தம் – மார்ச் 22
ஒக்டேன் 95 பெட்ரோல் 90 ரூபாய் அதிகரித்து 455 ரூபாயாக உயர்ந்தது.
ஒக்டேன் 92 பெட்ரோல் 81 ரூபாய் அதிகரித்து 398 ரூபாயாக உயர்ந்தது
ஒட்டோ டீசல் 79 ரூபாய் அதிகரித்து 382 ரூபாயாக உயர்ந்தது
சுப்பர் டீசல் 90 ரூபாய் அதிகரித்து 443 ரூபாயாக உயர்ந்தது
மண்ணெண்ணெய் 60 ரூபாய் அதிகரித்து 255 ரூபாயாக உயர்ந்தது
நான்காவது திருத்தம் – மே 03
ஒக்டேன் 95 பெட்ரோல் 15 ரூபாய் அதிகரித்து 470 ரூபாயாக உயர்ந்தது
ஒக்டேன் 92 பெட்ரோல் 12 ரூபாய் அதிகரித்து 410 ரூபாயாக உயர்ந்தது
ஒட்டோ டீசல் 10 ரூபாய் அதிகரித்து 392 ரூபாயாக உயர்ந்தது
சுப்பர் டீசல் 15 ரூபாய் அதிகரித்து 458 ரூபாயாக உயர்ந்தது
மண்ணெண்ணெய் 10 ரூபாய் அதிகரித்து 265 ரூபாயாக உயர்ந்தது
ஐந்தாவது திருத்தம் – மே 31 நள்ளிரவு
ஒக்டேன் 95 பெட்ரோல் 25 ரூபாய் அதிகரித்து 495 ரூபாயாக உயர்ந்தது
ஒக்டேன் 92 பெட்ரோல் 24 ரூபாய் அதிகரித்து 434 ரூபாயாக உயர்ந்தது
ஒட்டோ டீசல் 15 ரூபாய் அதிகரித்து 407 ரூபாயாக உயர்ந்தது
சுப்பர் டீசல் 20 ரூபாய் அதிகரித்து 478 ரூபாயாக உயர்ந்தது
மண்ணெண்ணெய் 20 ரூபாய் அதிகரித்து 285 ரூபாயாக உயர்ந்தது
பெப்ரவரி 1 ஆம் திகதி விலைகளுடன் தற்போதைய விலைகளை ஒப்பிடுகையில், கடந்த நான்கு மாதங்களில்
ஒக்டேன் 95 பெட்ரோல் 45.6 வீதம்
ஒக்டேன் 92 பெட்ரோல் 48.6 வீதம்
ஒட்டோ டீசல் 46.9 வீதம்
சுப்பர் டீசல் 48 வீதம்
மண்ணெண்ணெய் மிக அதிகபட்சமாக 56.6 வீதம் என விலை உயர்வை சந்தித்துள்ளது.