களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
கோனாபொல கந்தேவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொண்டைப் புற்று நோய் காரணமாக மூன்று மாதங்களாக களுபோவில போதனா வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 03:00 மணியளவில் நான்காம் மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து தரையில் குதித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -