-யாழ் நிருபர்-
மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்து விட்ட நிலையில், அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
மன விரக்தியடைந்த அவர் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கமராவில் பதிவாகியுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.