மட்டு ஆரையம்பதியில் வாகன விபத்து: சாரதி படுகாயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே காத்தான்குடியிலிருந்து ஆரையம்பதி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டிருந்த சாரதிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த நபர் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்