-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதி துவரங்காடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன் ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த மாடுகளுடன் மோதாதவாறு திருப்பி எடுக்க முயற்சி எடுத்த வேளை வீதியை விட்டு விலகி அங்கிருந்த அதி உயர் மின்னழுத்த மின்கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தின் காரணமாக மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்ததால் திருகோணமலையின் பரவலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.