பியூமி ஹன்சமாலியின் அழகுசாதன பொருள் விற்பனை நிலையம் : விசாரணை ஆரம்பம்

சூட்சுமமான குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதன பொருட்கள் அவரது நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதன பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், பியூமி ஹன்சமாலியினால் நடத்தப்பட்டு வரும் வியாபாரங்களின் வருமான வரி செலுத்துதல் மற்றும் கணக்கு வழக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பியூமி ஹன்சமாலியின் அழகுசாதன பொருள் விற்பனை நிலையம் : விசாரணை ஆரம்பம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்