மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர (உயிரியல்) பிரிவில் கல்வி பயிலும் மாணவரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த அகிலன் துஷ்யந்தன் (வயது -18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தூக்கிட்டு திங்கட்கிழமை காலை தற்கொலைக்கு முயன்ற நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை பகுதியில் வசிக்கும் பிரபல வைத்தியர் ஒருவரின் மகனான குறித்த மாணவன் உயரதரத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை வீட்டின் மேல்பகுதிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவன் கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்று சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இரண்டாம் இணைப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
குறித்த மாணவன் அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயை அடித்துள்ளார். அதற்காக அவருடைய தந்தை அவரை திட்டியதாகவும் அதனால் மனமுடைந்த மாணவன் இவ்வாறானதொரு முடிவை எடுத்ததாக குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த மாணவன் அவரது தாயாரிடம் ‘என்னைவிட அப்பாவிற்கு நாய் தான் முக்கியமா’? என்று கேட்டதாகவும் அதன் பின் தாயை பணிஸ் வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பிவிட்டு வீட்டு மாடிக்கு சென்று தூக்கு மாட்டி கொண்டதாகவும் மாணவனின் குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -