-கல்முனை நிருபர்-
புதிய 2023 ஆம் ஆண்டில் அரசசேவையாளர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இதற்கமைய, இப் புதிய ஆண்டில் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின. பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் ஆசிரியர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
- Advertisement -
இங்கு, இறைவணக்கம், தேசிய கீதம், ஆசிரியர்களின் சத்தியப்பிரமாண உறுதியுரை ஆகியன இடம் பெற்றது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைவாக நாட்டை கல்வி, சமூக, பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வகையில் அரச சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் பொதுமக்களுக்கான சேவை வழங்க முன்வரவேண்டும் என வித்தியாலய அதிபர் க.செல்வராசா கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதி அதிபர்களான சண்முகநாதன், புவனேஸ்வரி உட்பட ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- Advertisement -