கோறளைப் பற்று பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான அலுவலக ஆரம்ப நாள் நிகழ்வு

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கீழ் மக்களுக்கான புத்தாக்கம் தரும் புதிய சிந்தனைகளுடன்,  2023ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நாள் நிகழ்வு  கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன்  தலைமையில் பிரதேச சபை வளாகத்தில்  இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது சபையின் செயலாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து  தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின்சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்காகவும் உயிர்நீர்த்த அனைவருக்காகவும் இறைவணக்கம் செய்யப்பட்டது.

அத்துடன் இந்நாட்டின் மக்களுக்காக  ஒன்றிணைந்த பணியாளர்கள் என்ற வகையில் இன, மொழி, கடந்து அனைவருக்காகவும் நேர்மையுடனும், வினைத்திறனுடனும் ஆற்றி வரும் கடமைகளை மலர்ந்துள்ள புதிய ஆண்டில் புத்தாக்கத்துடனும், புத்துணர்வுடனும். திறன்பட கொண்டுசெல்வதற்கான சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் பாற்சோறு பகிர்ந்தளிக்கப்பட்டது.

சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறறைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர், ஊழியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் நூலக உதவியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.